இத்தாலிய மறுமலர்ச்சிக்கு பிளாரன்ஸ் நகர
மக்கள் ஆற்றிய பங்களிப்பை ஆராயவும்.
Answers
Answered by
0
இத்தாலிய மறுமலர்ச்சிக்கு பிளாரன்ஸ் நகர மக்கள் ஆற்றிய பங்களிப்பு
- 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் பிளாரன்ஸ் நகரில் தாந்தே மற்றும் பெட்ரார்க் என்ற இரு இத்தாலிய கவிஞர்கள் தோன்றினர்.
தாந்தே
- தெய்வீக இன்பியல் என்னும் நூலினைப் படைத்தார்.
- இது இடைக்கால கலாச்சாரத்தின் சுருக்கமாக திகழ்ந்தது.
- காரணங்கள் மற்றும் இறை அருள் மூலமாக மனிதர்கள் மறுமலர்ச்சி அடைவர் என்பது அந்த நூலின் கருப்பொருள் ஆகும்.
பெட்ரார்க்
- இலத்தீன் மற்றும் இத்தாலிய மொழிகளில் படைப்புகளை உருவாக்கினார்.
- இவரை இத்தாலிய மறுமலர்ச்சி இலக்கியத்தின் தந்தை என அழைத்தனர்.
- சிசரோவின் கடிதங்களை இவர் மறுபடியும் கண்டுபிடித்தார்.
ஜியோவனி பொக்காசியோ
- இவர் பெட்ரார்க்கின் சீடர் ஆவார்.
- இவர் 100 கதைகளின் தொகுப்பை டெக்கமரான் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்.
Similar questions