தென்அமெரிக்காவில் முதன்முதலாகப்
பிரேசிலில் அரசியலமைப்பு சார்ந்த முடியாட்சி
அரசு அமைந்ததற்கான சூழ்நிலைகளை
எடுத்துரைக்கவும்
Answers
Answered by
0
தென்அமெரிக்காவில் முதன்முதலாகப் பிரேசிலில் அரசியலமைப்பு சார்ந்த முடியாட்சி அரசு அமைந்ததற்கான சூழ்நிலை
- பிரேசில் போர்த்துகலின் ஒரு காலணியாக இருந்தது.
- 1808 ஆம் ஆண்டு நெப்போலியன் போர்த்துகலின் மீது படையெடுத்த போது போர்த்துகலின் அரசர் டாம் ஜோவோ பிரேசிலுக்குத் தப்பி ஓடினார்.
- டாம் ஜோவோ பிரேசிலில் நிலச் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தல், இராணுவத்தை உருவாக்குதல், மருத்துவ, கலைக் கல்லூரிகளை நிறுவுதல் முதலிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரேசிலை பலப்படுத்தினார்.
- நெப்போலியன் தோற்றப் பின்னரும் டாம் ஜோவோபிரேசிலில் இருந்தார்.
- டாம் ஜோவோக்கு எதிராக சவால்கள் தோன்றியதால், பிரேசிலை தனது மகன் டாம் பெட்ரோவிடம் ஒப்படைத்து போர்த்துக்கல் சென்றார்.
- 1822 ஆம் ஆண்டு பிரேசில் போர்த்துக்கல் நாட்டிடம் இருந்து விடுதலை பெற்றது.
- தென் அமெரிக்காவில் முதன் முதலாக பிரேசிலில் அரசியலமைப்பு சார்ந்த முடியாட்சி அரசாக மாறியது.
Similar questions